குளித்தலை கடம்பர்கோவிலில் வரலாற்றில் நடந்த சம்பவம்....

அரக்கன் தூம்ரலோசனன் என்பவனை அழிக்க அம்பாள் துர்க்கையம்மன் வடிவில் சென்றாள். அரக்கன் துர்க்கையுடன் கடுமையாக போர் செய்தான். அரக்கனிடமிருந்த வரத்தால் துர்க்கையின் பலம் குறைந்தது. அவள் சப்தகன்னியர்களை துணைக்கு அழைத்து போரிடச் செய்தாள். அரக்கன் அங்கிலிருந்து ஓட, அவனை துரத்தி சென்ற சப்த கன்னியர்கள் முனிவரை அரக்கன் என்று எண்ணி அழித்தனர். அதனால் கொலைப்பாவமான பிரம்மஹத்தி தோசம் பற்றிக் கொண்டது. அத்தோசத்தினை நீக்க இத்தலத்தில் உள்ள கடம்பவனநாதரை வழிபட்டனர் சப்த கன்னியர்.
இத்தலத்தின் வரலாக சொல்லப்படுகின்ற மற்றொரு கதையில் தூம்ரலோசனன் சப்த கன்னியரை துரத்தி வர அவர்கள் சிவபெருமானின் பின்னே ஒளிந்து கொண்டார்கள். இறைவன் சப்த கன்னியருக்கு அடைக்கலம் தந்து அரக்கனை அழித்தார்.

Comments

Full collections download