• குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. இத்தலத்தில் கடம்பம் எனும் மரம் அதிகமிருந்தமையால் கடம்பை, கடம்பந்துறை, கடம்பவனம் என்று அழைக்கப்பட்டிருந்தது. சேரமகாசுரனிடத்திலிருந்து திருமால் வேதங்களை மீட்டற்குக் காரணமாகிய திருவருளைப்பெற்ற இடமாதலிற் சதுர்வேதபுரியென்றும், முருகவேள் பூசித்துப் பேறுபெற்றமையிற் கந்தபுரமென்றும் இது பெயர்பெறுகிறது, பிரமதேவரால் வழிபட்டுத் திருக் கோயில் முதலியன அமைத்துத் திருத்தேர்விழாவும் நடத்தினதால் பிரமபுரமென்றும் அழைக்ப்படுகிறது. தட்சிணகாசி, குழித்தண்டலை என்று பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
  • இறைவன் கடம்ப மரத்தில் காட்சியளித்தமையால் கடம்பவனநாதர், கடம்பேசுவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
  • இறைவி பாலகுஜலாம்பாள் என்றும் முற்றிலா முலையம்மை என்றும் அழைக்கப்படுகிறாள். இதற்கு இளமையான முலைகளைப் பெற்றவள் என்று பொருளாகும். அம்பிகைக்கு இரு மகன்கள் இருந்தாலும், அவர்களை கருவில் சுமந்து இறைவி பெறவில்லை என்பதால், முலைகள் இளமையானது என்று கூறுகின்றனர்.

Comments

Full collections download